×

மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்

கோவை, ஜன. 9:  கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாநகராட்சியில் 200க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிலர் சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி பாதிக்கப்பட்டால் அல்லது துப்புரவு பணியின்போது வேறு ஏதாவது அசாம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் மாநகராட்சி சார்பாக துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 40க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் போடப்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘துப்புரவு தொழிலாளர்கள் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யக்கூடாது என்பதற்காக ரோபோ வாங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் ரோபோக்கள் வாங்கப்பட உள்ளது. எனினும் சில சமயங்களில் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடும் போது எதிர்பாரதவிதமாக விஷ வாயு தாக்க வாய்ப்புள்ளது. அல்லது வேறு ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு முறையாக துப்புரவு தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பணியின்போது இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்தால் ரூ.10 லட்சமும், விபத்து ஏற்பட்டால் ஒரு லட்சமும் வழங்கும் வகையில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது’’ என்றார்.

Tags : cleaning workers ,corporation ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு