×

கல்வியாளர்கள் கோரிக்கை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில்
தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக, அதிமுக கடும் போட்டி
சுயேட்சை கவுன்சிலர்களை இழுக்க முயற்சி: முன்னெச்சரிக்கையாக தீவிர பாதுகாப்பு பணி

கந்தர்வகோட்டை, ஜன.9: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுவிற்கு தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சுயேட்சை கவுன்சிலர்களை இழுக்க இரு கட்சியினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழுவிற்கு 14 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் திமுக 3, காங்கிரஸ் 2, கம்யூனிஸ்ட் கட்சி 1ல் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 இடங்களில் வென்றுள்ளது.

சுயேட்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே திமுக மற்றும் அதிமுகவிடம் சுயேட்சைகளின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகின்றனர். ஏற்கனவே பதவியேற்பின்போது இருகட்சிகளும் சுயேட்சைகளை தங்கள் பக்கம் ஈக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டது. எனவே 11ம் தேதி நடைபெறவுள்ள மறைமுக தேர்தலில் திமுக, அதிமுகவிடையே கடும் போட்டி ஏற்படும் சூழல்ஏற்பட்டுள்ளது. சுயேட்சைகளை தங்களுக்கு வாக்களிக்கும்படி இரு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பேசி வருகிறார்கள். எனவே தேர்தல் நேரத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமலிருக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ் மற்றும் குமரன் ஆகியோர் அலுவலகத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகளை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி நேற்று முதலே அலுவலகத்தை சுற்றிலும் இரும்பு தகடுகளால் தடுப்பு அரண் அமைக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நடத்தியதிலும், வாக்கு எண்ணிக்கையிலும் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முன்உதாரணமாக இருந்தது. அதே போல் மறைமுக தேர்தலையும் எந்தவித பிரச்சினையின்றி நடத்த அதிகாரிகள் பணி செய்து வருகின்றனர்.

Tags : educators ,government schools ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...