×

திருவாசகத்தை ஆழ்ந்து படித்தால் அனைத்தும் புலப்படும்

கோவை,ஜன.9: கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆன்மத் தேடலுக்கு வழிகாட்டும் வகையில் எப்போ வருவாரோ ஆன்மீக உற்சவ நிகழ்ச்சி கடந்த 1-ம் தேதி துவங்கி வரும் 10-ம் தேதி வரை நடக்கிறது. கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மகேஸ்வரி சத்குரு முகவுரை வழங்கினார். பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றத்தினர் அருளிசை வழங்கினர். இதையடுத்து மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் டாக்டர்.சுதா சேஷய்யன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மாணிக்கவாசகர் திருவாசகம், திருக்கோவையார் நூல்களில் பாடல்களை அருளியுள்ளார். தொழுதகை துன்பந்துடைப்பாய் பாடலில் ஆகாயம், காற்று, நீர், நெருப்பு, நிலம் என ஐந்து பூதங்களில் கடவுள் இருப்பதை பற்றி பாடியிருப்பார். சாதாரணமாக படிப்பவர்களுக்கு வாழ்த்து பாடல் போல தெரியலாம். ஆனால் அதில் உலகத்தின் தோற்றம், ஐம்பூதங்களின் இயல்புகளை குறித்து அன்றே சாதாரணமாக சொல்லியிருப்பார். மாணிக்கவாசகரின் பாடல்களில் இயற்பியல், மெய்யியல், மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார் கருத்துகள் பொதிந்து உள்ளது. திறந்த கண்களோடு ஆழமாக ஊன்றி படித்தால் அனைத்தும் புலப்படும் என்றார்.


Tags : Thiruvasakam ,
× RELATED திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி