×

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொன்னமராவதி சுயேட்சை கவுன்சிலர் வளர்மதி முருகேசன் திமுகவில் இணைந்தார்

பொன்னமராவதி, ஜன.9: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொன்னமராவதி ஒன்றியக்குழு 4வது வார்டு சுயேட்சை உறுப்பினர் வளர்மதி முருகேசன் திமுகவில் இணைந்தார்.நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற, புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய 4வது வார்டு சுயேச்சை உறுப்பினர் வளர்மதி முருகேசன் நேற்று (8ம் தேதி), மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அதுபோது முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் ரகுபதி எம்எல்ஏ, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் செல்லபாண்டியன், பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, பொன்னமராவதி பேரூர்செயலாளர் அழகப்பன், புதுக்கோட்டை நகர முன்னாள் செயலாளர் அரு.வீரமணி ஆகியோர் உடனிருந்தார்.

Tags : Walarmathi Murugesan ,MK Stalin ,Ponnamaravathi Independent ,DMK ,
× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்