×

கறம்பக்குடியில் 39 ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும்

கறம்பக்குடி, ஜன.9: கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக பதவியேற்ற ஊராட்சி தலைவர்கள் உறுதியளித்தனர். கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர்களாக போட்டியிட்டு அதிரான்விடுதி ஊராட்சியில் பார்வதி, அம்புக்கோவில்- சுமன், இலைகடிவிடுதி ஸ்டாலின் சேகர், எம்.தெற்குதெரு- போதும்பொண்ணு, ஒடப்பவிடுதி -கற்பகவள்ளி, காட்டாதி- கலை வாணி, கணக்கன்காடு- செந்தில்குமார், கரு.கீழத்தெரு லட்சுமி, கரு.தெற்கு தெரு சித்ரா தேவி, கருப்பட்டிபட்டி-சர்மிளா, களியறான்விடுதி-விமலா, களபம்-கண்ணகி, கரம்பவிடுதி சித்ரா, கீறாத்தூர்-சுதா , குல ந் ரான் பட்டு வீரப்பன் ,செங்கமெடு பாலசுப்ரமணியன், திரு மனம்செரி- பிரபுகாந்தி, தீத்தாணிபட்டி -ரெத்தினம், தீத்தான்விடுதி- ஜெயபாரதி, பட்டத்துக்காடு- சின்னப்பா, பந்துவக்கோட்டை- பத்மினி, பல்லவராயன்பத்தை- இந்திரா, பாப்பாப்பட்டீ- விஜயகுமார், பிளாவிடுதி-விஜயரவி பல்லவராயர், புதுவிடுதி- செவன்நன், பொன்னன்விடுதி- லதா, மருதன்கொன்விடுதி- நிலவுபர்நிசா, மலையூர் கலை செல்வி, மாங்கோட்டை-பிரேமா, முதலிப்பட்டி- சாகுல்ஹமீது, முள்ளங்குருசி-காந்திமதி, மைலன்கொன்பட்டி-கோவிந்தராஜ், ரான்கியன்விடுதி-சுமதி, ரெகுனாதபுரம்- மணிகண்டன், கரு.வடதெரு- தவ.பாஞ்சாலான், வலகொண்டான்விடுதி - முருகேசன், வானக்கன்காடு கருப்பையா, வான்டான்விடுதி- சந்திரசேகர், வெள்ளாளவிடுதி- சிவகாமி ஆகியோர் வெற்றி பெற்று தலைவர்களாக அந்தந்த ஊராட்சியில் பதவி ஏற்றுக்கொண்டனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். பதவி ஏற்றுக்கொண்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் ஊராட்சி யின் அனைத்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி கூறினர்.

Tags : facilities ,Karambakkudi ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...