×

குளங்களில் அத்துமீறி மீன் பிடிப்பு

கோவை, ஜன.9: கோவை நகரில் மழையால் குறிச்சி குளம், முத்தண்ண குளம், செல்வாம்பதி, நரசாம்பதி உள்ளிட்ட குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து நிரம்பியது.  குளங்களில் மீன் பிடிக்க, குளிக்கக்கூடாது என மாநகராட்சி, பொதுப்பணித்துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களில் மீன் பிடிக்க சிறுவர்கள் பலர் கூட்டமாக குவிவது வாடிக்கையாகி விட்டது. குறிச்சி குளத்தில் நீச்சல் தெரியாத நிலையில் சிறுவர்கள் சிலர் தூண்டில் போட்டு அபாயகரமான இடத்தில் மீன் பிடிக்கிறார்கள். பெரியகுளத்தில் கம்பி வேலிக்கு இடையே புகுந்து சிலர் மீன் பிடிக்கிறார்கள். இது தொடர்பாக பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘‘பெரிய குளத்தில் கம்பி வேலியை சிலர் சேதமாக்கி விட்டார்கள். குளத்தில் களிமண், சகதி அதிகமாக இருக்கிறது. நீச்சல் தெரிந்தவர்கள் குளத்தில் இறங்கினால் கூட ஆபத்துதான். பல நேரங்களில் எச்சரித்தும் குளத்தில் இறங்கி குளிக்கிறார்கள். சிலர் மீன் பிடிக்கிறார்கள். போலீஸ் மூலமாக குளங்களில் அத்துமீறும் நபர்களை வெளியேற்றி வருகிறோம்’’ என்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...