×

காந்திபுரம் 2வது மேம்பாலம் சோதனை ஓட்டத்திற்காக திறப்பு

கோவை ஜன, 9 :  கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள 100 அடி சாலையில்   ரூ.75 கோடியில் காந்திபுரத்தின் மேம்பாலத்தை கடக்கும் வகையில் 2வது மேம்பாலம் கட்டும் பணி 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.
இந்த பாலம், ஜி.பி. தியேட்டர் சந்திப்பில், காந்திபுரம் மேம்பாலத்தைக் கடக்கும் பகுதியில் சுமார் 60 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. பார்ப்பதற்கே அச்சத்தை ஏற்படுத்துகின்ற இப்பாலத்தை  சில  மாதங்களாக பொதுமக்கள் உடற்பயிற்சிக்காக உபயோகித்து வந்தனர். பொதுமக்கள் இப்பாலத்தில் செல்ல மிகவும் ஆவலுடன் இருந்த நிலையில்,  பணிகள் முடிந்து நேற்று  சோதனைக்காக பாலம் திறக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இப்பாலத்தில் சென்ற வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சிலர் இப்பாலத்தின் உயரமான பகுதியில் நின்று  செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,  ‘இப்பாலத்தின் ஆரம்பகட்ட பணிகளின்போது இதன் வடிவம் மற்றும் உயரத்தை பார்த்து சமூக வலைத்தளங்களில் சூசைடு பாலம் என்று கிண்டல் செய்தனர். பார்ப்பதற்கு மிக உயரமாகவும், அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கின்ற  இப்பாலத்தில் வாகனங்கள் செல்ல நன்றாகவும்,  தரமானதாகவும் உள்ளது.  நவஇந்தியா பகுதியில் இருந்து 100 அடி ரோடு,  சிவானந்தா காலனி போன்ற  பகுதிகளுக்கு  செல்பவர்கள் இனி லட்சுமி மில்ஸ், காந்திபுரம் போன்ற நெரிசல் மிக்க பகுதிகளுக்கு சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள அவசியமில்லை.  இப்பாலத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் பயனடைவார்கள்’ எனக் கூறினார்கள்.

Tags : Gandhipuram 2nd Bridge Test Drive ,
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்