×

பண்ணைக்கருவிகள் வாங்க ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கீடு

ஈரோடு, ஜன.9: மானியத்தில் பண்ணைக்கருவிகள் வாங்குவதற்காக ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வேளாண்மைத்துறை மூலம் கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு ஏற்படுத்தி அந்த குழுவினருக்கு மானியத்தில் பல்வேறு வகையான விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின்கீழ், பண்ணை இயந்திர நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளின் கூட்டுக்கூட்டம் ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பிரேமலதா தலைமை வகித்தார். ஈரோடு உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் சோமசுந்தரம், தோட்டக்கலை உதவி இயக்குநர் நக்கீரன் ஆகியோர் திட்டம் குறித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் பிரேமலதா பேசுகையில்,`ஈரோடு மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள 35 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணைக்கருவிகள் வாங்க தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 75 லட்சம் தொகுப்பு நிதி வழங்கப்பட உள்ளது’ என்றார். கூட்டத்தில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் வசந்தி, அட்மா திட்டப்பணியாளா–்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...