×

மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

கரூர், ஜன.9: மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் நடத்திய மறியல் போராட்டத்தில் கரூர் மாவட்டத்தில் 453 பேர் கைது செய்யப்பட்டனர். அத்தியாவசிய பொருட்களை பொது வினியோகத்தில் வழங்க வேண்டும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஊக வணிகம் சில்லறை விற்பனையில் அன்னிய மூலதனம் வருவதை தடுக்க வேண்டும் .44 தொழிலாளர் சட்டங்களை 4 குறியீடாகும் நடவடிக்கைகளைக் கைவிட்டு கறாராக அமலாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரத்துக்கு குறையாது நிர்ணயம் செய்யவேண்டும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பணம் மதிப்பிழப்பு ஜிஎஸ்டி ஆலை மூடல் வேலை இறந்தோருக்கு உரிய நிவாரணம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரயில்வே பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிலக்கரி சேலம் உருக்காலை பாரத் பெட்ரோலியம் இந்துஸ்தான் பெட்ரோலியம் பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அமுலாக்க வேண்டும். தினக்கூலி அவுட்சோர்சிங் காண்ட்ராக்ட் தொகுப்பூதியம் மதிப்பூதியம் போன்ற பெயர்கள் மூலம் நடைபெறும் உழைப்புச் சுரண்டலை தடுத்திட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பை நல வாரியங்கள் மூலமாக செயல்படுத்தி ரூ 3000 குறையாமல் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.

போனஸ் வருங்கால வைப்பு நிதி போன்றவற்றில் உச்சவரம்பு களை நீக்க வேண்டும் .பணிக்கொடை உயர்த்த வேண்டும் புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும் .வேளாண் கடன்களை ரத்து செய்து விவசாயிகளுக்கான எம்எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமலாக்க வேண்டும் .கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டத்தை நகர் புறத்திற்கு விரிவுபடுத்தி வேலை நாட்களையும் கூலியையும் உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திதொழிலாளர்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அரசு பொதுத்துறை கைகள் பிடித்திட வேலையின்மை பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும். மக்கள் விரோத தொழிலாளர் விரோத முதலாளிகளாக கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8ம் தேதி அகில இந்திய பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், தொழிற்சங்க உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும், வேலையில்லா பிரச்னைக்கு தீர்வுகாணவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கரூர் பேருந்துநிலையம் அருகே உள்ள ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. ஜீவானந்தம், அப்பாசாமி, முருகேசன், வடிவேலன், குப்புசாமி, பால்ராஜ், ஆனந்தராஜன்,மோகன், கதிரேசன் உள்ளிட்டோர் பேசினர்.பின்னர்கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டவுண்போலீசார் அவர்களை கைது செய்தனர். 80பெண்கள் உள்பட 280பேரை போலீசார் கைது செய்து வேனில்ஏற்றி சென்று திருமண மண்டபத்தில் வைத்தனர்.தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கோவை சாலை மேற்பார்வைபொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பால்ராஜ் தலைமை வகித்துபேசினார். மின்வாரியத்தை மக்கள் சேவை நிறுவனமாக பொதுத்துறையாக நீடிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், பதவி உயர்வு வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் சார்பில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்ட அரசுஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார், நிர்வாகிகள் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். குளித்தலை: கரூர் மாவட்டம் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை காந்தி சிலைை முன்பு நடைபெற்று திடீரென ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவலகம் முன்பு திருச்சி கரூர் சாலையில் ஏராளமானோர் ஆண்கள் பெண்கள் சாலைை மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் திருச்சி கரூர் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் ஆண்கள் 25, பெண்கள் 59 உள்பட மொத்தம் 84 பேர் கைது செய்யப்பட்டனர். அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அரசு மருத்துவமனை அருகில் அனைத்து தொழிற்சங்ககளின் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் மாவட்டச் செயலாளர் ராஜாமுகமது தலைமை வகித்தார். கட்டுமானத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், நல வாரிய பணப் பயனை இரட்டிப்பாக்கிட வேண்டும். தொழிலாளர்கள் விரோத சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் 19 பெண்கள் உட்ட 55 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மாலை 6 மணிக்குப் பிறகு அனைவரையும் விடுதலை செய்தனர். தோகைமலை: தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு பொது தொழிலாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். கடவூர் ஒன்றிய செயலாளர் பழனிவேல், ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி, அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன், தமிழ்நாடு பொது தொழிலாளர்கள் பாதுகாப்பு நல சங்க மாநில பொது செயலாளர் உருசுலாநாதன், சங்க பொருளாளர் புனிதவதி ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர்.

பின்னர் தோகைமலை பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று ஐஓபி வங்கி முன்பு குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டிஎஸ்பி சுப்ரமணி மற்றும் தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் ஆகியோர் மறியல் போராட்டம் செய்த 5 பெண்கள் உள்பட 34 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து பின்னர் மாலை 6 மணிக்கு அனைவரையும் விடுவித்தனர்.

Tags : Trade union protest ,district ,Karur ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...