போக்குவரத்து பாதிப்பு மத்திய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

குளித்தலை, ஜன.9: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் அரசு பொது நிறுவனங்களை விற்கக்கூடாது தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை கண்டித்தும் குறைந்தபட்ச ஊதியம் ரூ 21,000 வழங்க வேண்டும் இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பதை கண்டித்தும் நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறிவிப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை கரூர் மாவட்டம் குளித்தலை எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு குளித்தலை கிளை சங்க செயலாளர் ராஜராஜன் தலைமை வகித்தார். இதில் அலுவலர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், தொழிற்சங்க உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும், வேலையில்லா பிரச்னைக்கு தீர்வுகாணவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Tags : LIC ,protest ,government ,
× RELATED எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க...