×

மக்கள் கோரிக்கை ஊராட்சியில் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்

அரவக்குறிச்சி, ஜன. 9: ஊராட்சியில் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என அரவக்குறிச்சியில் புதிதாக பதவியேற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் டிஎஸ்பி அறிவுறுத்தினார். அரவக்குறிச்சியில் காவல்துறை சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதிதாக பதவியேற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கான அறிவுறுத்தல் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.அரவக்குறிச்சி காவல் சரகத்திற்குட்பட்ட பஞ்சாயத்துக்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதிதாக பதவியேற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் அரவக்குறிச்சி ஊரக உட்கோட்ட டிஸ்பி கல்யாண் குமார் தலைமையில் நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடந்த 6ம் தேதி வெற்றி பெற்ற ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உறுதி மொழி எடுத்து கொண்டு பதவியேற்றனர்.

பின்னர் டிஸ்பி கல்யாண் குமார் பேசுகையில், ஊராட்சிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மற்றும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். பஞ்சாயத்து பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து செல்ல அறிவுறுத்த வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஒட்டுவது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வது, வாகனங்களில் அதிகபாரம் ஏற்றி செல்வதை தடுக்கும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது. மீறுவோர் பற்றி காவல்துறைக்கு தெரிவிப்பது போன்றவற்றை உள்ளாட்சி தேர்தலில் புதிதாக பதவியேற்ற பஞ்சாயத்து தலைவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இதில் அரவக்குறிச்சி காவல் சரகத்திற்குட்பட்ட 35 பஞ்சாயத்துக்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதிதாக பதவியேற்ற பஞ்சாயத்து தலைவர்கள் , இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், எஸ்ஐக்கள் அழகு ராம், மனோகரன் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...