×

கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று துவங்கி 12ம் தேதி வரை வழங்கப்படும்

கரூர், ஜன. 9: கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று துவங்கி 12ம் தேதி வரை வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொங்கல் நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி கரும்புத்துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கத் தொகை ரூ. 1000 அரசால் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வரால் இந்த திட்டம் கடந்த 29ம்தேதி அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் 5ம்தேதி அன்று பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 9ம்தேதி அன்று தொடங்கி 12ம்தேதி வரையிலும், விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ம்தேதி அன்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வழங்கப்படும்.மேலும், நெரிசலை தவிர்க்கும் வகையில் அந்தந்த நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பகுதி வாரியாக வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் அறிவிப்பாக தெரிவிக்கப்படும். இதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு உ£ய நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...