×

11ம் தேதி தலைவர், துணைத்தலைவர் தேர்வு: அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சுண்ணாம்பு வர்ணம் பூசும் பணி தீவிரம்

அரவக்குறிச்சி, ஜன. 9: ஊரக உள்ளாச்சி தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெ டுக்கப் பட்டதையடுத்து அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட கிராம ஊராட்சி அலுவலகங்கள் சுண்ணாம்பு வர்ணம் பூசி தயார்படுத்தப்படும் பணி தீவிரமாக நடை பெறுகின்றது. சமீபத்தில் நடைபெற்ற ஊரகஅரவக்குறிச்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலருக்கு - 1. ஒன்றிய குழு உறுப்பினருக்கு 11, பஞ்சாயத்து தலைவருக்கு 20, பஞ்சாயத்து உறுப்பினருக்கு 156 என அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 188 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று ஊரக உள்ளாட்சிக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 6ம் தேதி வெற்றி பெற்ற ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உறுதி மொழி எடுத்து கொண்டு பதவியேற்றனர்.

இந்நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை)ஒன்றிய குழு உறுப்பினர் 11 பேரில் காலை 11 மணிக்கு ஒன்றியக்குழு தலைவரையும் ( சேர்மன் ) , மதியம் 3 மணிக்கு ஒன்றியக் குழு துணை தலைவரையும் தேர்ந்தெடுக்கின்றனர். 3 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பணியாற்ற அறைகள் தயாராகின்றது. மேலும் அலுவலகம் சுண்ணாம்பு உள்ளிட்ட வர்ணம் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுபெறுகின்றது. இதே போல கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் பணியும் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெறுகின்றது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெ டுக்கப் பட்டதையடுத்து அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட கிராம ஊராட்சி அலுவலகங்கள் சுண்ணாம்பு வர்ணம் பூசி தயார்படுத்தப்படும் பணி தீவிரமாக நடை பெறுகின்றது.

Tags : President ,Aravacurichi Union Office ,
× RELATED உள்நாட்டு விமான சேவை தொடக்கம் எதிரொலி:...