×

வருமான வரி உச்ச வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்

நடப்பு நிதியாண்டுக்கான (2020-21) மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் முதல் வார த்தில்  நிதியமைச்சர் நிரமலா சீத்தாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த பல்வேறு சலுகைகளை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கும் என பலத்த எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் நிலவுகிறது. ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு விட்டதால், ரயில்வேத்துறைக்கு என  தனி பட்ஜெட் தற்போது கிடை யாது.
பட்ஜெட் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைகள் குறித்து தட்சிண ரயில்வே எம்ப் ளாயிஸ் யூனியனின் மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், ரயில்வே ஊழியர்கள் குழந்தைகள் தங்கி மேற்படிப்பு படிக்க பிரதான நகரங்களில் தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்றும் பெண் ஊழியர்களின் குழந்தைகளை பணி நேரத்தில் பாதுகாக்க காப்பகம் கட்டித்தரப்படும் என்றும் 2011-12 நிதியாண்டு அறிவிக்கப்பட்டது. 20 ரயில்வே கோட்ட தலைமையிடங்களில் பெண் ஊழியர்கள் விடுதி கட்டப்படும் என 2013-14 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதுபோன்று பல திட்டங்கள் முந்தைய பட்ஜெட்டுகளில் ஊழியர்கள் நலன்களுக்காக அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. இவைகளை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உள்ளது. பணப்புழக்கத்தை அதிகப் படுத்த இந்த உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என பொருளா தார வல்லுனர்கள் கருத்துகளாகவும், மத்திய மாநில அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளாகவும் முன் வைக்கின்றன. வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாகவும், திடக் கழிவு ரூ. 5 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையும். அரசு பரிசீலிக்கும் என நம்பிக் கையுடன் காத்து இருக்கிறோம் என கூறினார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில்வே பென்சனர்கள் சங்க உதவி தலைவர் வெங்கடேஷ்வரன் கூறுகையில், மத்திய அரசு ஓய்வூதியதாரர் களுக்கு மருத்துவப்படி ரூ.ஆயிரம் வழங்கப் படுகிறது.
வயதானவர்களுக்கு மருத்துவ செலவு மிக அதிகம் என்பதை கருத்தில் கொண்டு மருத்துவபடி மாதம் ரூ.3 ஆயிரமாக  ஆக உயர்த்தி தர வேண்டும். என்பது வயது நிரம்பிய வர்களுக்கு தற்போது பென்சன் உயர்த்தி தரப்படுகிறது. அதற்கான வயது வரம்பை 70 ஆக குறைக்க வேண்டும்.

மேலும் பென்சன் என்பது ஊதியம் அல்ல. அரசுத் துறைகளில் பணியாற்றி யதற்காக வழங்கப்படும் உதவித் தொகை. எனவே மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கு வருமான வரி விலக்கு கட்டாயம் அளிக்க வேண்டும். ஓய்வு பெறும் போது ஓய்வூதியத்தை முன்கூட்டி தொகுத்து கம்யூட்டேஷனாக பெறுகிறோம். அதற்கு ஈடாக ஓய்வூதியத்தில் பாதி தொகை 15 ஆண்டுகள் பிடித்தம் செய்யப்படுகிறது. அதை பத்து ஆண்டுகளாக குறைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  மனுவாக மத்திய நிதி யமைச்சர் மற்றும் ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி இருக்கிறோம். வரும் பட்ஜெட்டில் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகள் அரசு ஏற்கும் என எதிர் பார்ப்போடு இருக்கிறோம் என கூறினார்.
பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்? ரயில்வே தொழிற் சங்கங்கள் கோரிக்கை வயதானவர்களுக்கு மருத்துவ செலவு மிக அதிகம் என்பதை கருத்தில் கொண்டு மருத்துவபடி மாதம் ரூ.3 ஆயிரமாக  ஆக உயர்த்தி தர வேண்டும். 80 வயது நிரம்பிய வர்களுக்கு தற்போது பென்சன் உயர்த்தி தரப்படுகிறது. அதற்கான வயது வரம்பை 70 ஆக குறைக்க வேண்டும்.

Tags :
× RELATED காவிரியில் போதிய இருப்பு இல்லாததால்...