×

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனை தாமதம்

திருவள்ளூர், ஜன. 9: திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பரிசோதனை செய்து தரக்கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருவள்ளூர் நேதாஜி சாலையை சேர்ந்தவர் தமிழரசி (22). இவர் பட்டறைபெரும்புதூர் பகுதியை சேர்ந்த நவீன் (24) என்பவரை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அநன்யா (2) என்ற மகள் இருக்கிறாள். தமிழரசி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.இந்நிலையில், கடந்த ஓராண்டாக கணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தமிழரசிக்கும், நவீனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மிகுந்த மனவேதனையுடம் தமிழரசி இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மனவேதனை தாங்காமல் நேற்று முன்தினம் இரவு தமிழரசி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், சாவில் மர்மம் இருப்பதாக தமிழரசியின் தந்தை மார்ட்டின், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பகல் 2 மணி வரை பிரேத பரிசோதனை செய்யாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், தலைமை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு டவுன் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். தொடர்ந்து பரிசோதனை முடித்து உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால், திருவள்ளூரில் இருந்து ரயிலடி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி வாகன போக்குவரத்து அரை மணி நேரம் பாதிப்பு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : teenager ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை