தோழியுடன் தவறான தொடர்பு மகளை மீட்டு தர கோரி தந்தை கதறல்

அண்ணாநகர்: தோழியுடன் தவறான தொடர்பில் உள்ள மகளை மீட்டு தருமாறு நேற்று திருமங்கலம் காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் தந்தை புகாரளித்தார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் (44) என்பவர் நேற்று முன்தினம் திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது 17 வயது மகளுக்கு படிப்பு சரியாக வரவில்லை. இதனால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தேன். அங்கிருந்து அவர், கடந்த சில மாதங்களாக நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஆடை வடிவமைப்பு குறித்து படித்து வந்துள்ளார். அப்போது அங்கு படித்த மற்றொரு பெண்ணுடன் பவித்ராவுக்கு தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எனது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சைதாப்பேட்டை உறவினர் வீட்டில் இருந்தபோது காணாமல் போய்விட்டார். அவரை தேடி வந்த நிலையில், அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள பிரபல அமைப்பில் பவித்ரா கவுன்சிலிங் பெறுவதாக தெரிய வந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த அமைப்பிடம் எனது மகளை திருப்பி அனுப்பும்படி வலியுறுத்தியும், மகளை அனுப்ப மறுத்து விட்டனர். மேலும், அவளுடன் தகாத உறவில் இருக்கும் பெண்ணும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.  எனவே நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்து, எனது மகளை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு  குறிப்பிட்டிருந்தார். திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் 17 வயது பெண்ணுடன் தொடர்பில் உள்ள மற்றொரு பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags : Daddy ,
× RELATED மாதவரத்தில் பரபரப்பு 2வது மாடியில்...