×

20 படுக்கை வசதிகள் கொண்ட கிழக்கு தாம்பரம் மருத்துவமனை பயன்பாட்டில் இல்லாத நிலையில் உள்ளது: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பேசியதாவது:  குரோம்பேட்டை மருத்துவமனை கூட, ஒரு காலத்தில் தாம்பரம் மருத்துவமனையாக தான் செயல்பட்டு வந்தது. அதேபோல, காசநோய் மருத்துவமனையும் அங்கேதான் இருக்கிறது. சித்தா மருத்துவமனையும் அங்கேதான் இருக்கிறது. தாம்பரம் நகராட்சியில் 3 மருத்துவமனைகளை தாம்பரம் நகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்துநடத்தி கொண்டிருந்தது. மேற்கு தாம்பரத்தில் இருக்கிற மருத்துவமனை, மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளோடு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. மற்ெறாரு மருத்துவமனை சுமாராக செயல்பட்டு வருகிறது. கிழக்கு தாம்பரத்தில் 20 படுக்கை வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

ஆனால் அது பயன்பாட்டில் இல்லாத ஒரு நிலை இருக்கிறது. கிழக்கு தாம்பரத்தில் இருக்கிற அந்த மருத்துவமனையில் டயாலிஸ் சென்டருக்காக நிறைய பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்து மிஷன் மருத்துவமனை என்று ஒரு மருத்துவமனை மெயின் ரோட்டில் இருக்கிறது. அது இருந்தும் கூட தற்போது பொதுமக்களுக்கு கிழக்கு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையை நல்ல தரமான மருத்துவமனையாக மாற்றி கொடுத்தால் சந்தோசப்படுவோம். . அப்படி இல்லை என்று சொன்னால், சிஎஸ்ஆர் பண்ட் நிறைய கம்பெனிகள் தாம்பரத்தினை சுற்றி இருக்கிறது. நாங்களும் முயற்சி செய்கிறோம். ஏழை, எளிய மக்களுக்கு உதவுகின்ற வகையில் அந்த மருத்துவமனைகளை மாற்ற வேண்டும். அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: மக்கள் நல்வாழ்வு துறையும், உள்ளாட்சி துறையும் இணைந்து அங்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : East Tambaram Hospital ,facility ,DMK MLA ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...