×

தாம்பரத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. இதில் மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து அளித்தல் மற்றும் குப்பைகளை பொது இடங்களில் வீசாமல் இருந்தல் குறித்து கோஷம் எழுப்பியபடி சென்று தாம்பரம்-முடிச்சூர் சாலையில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையராஜா, சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர் சிவகுமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Tambaram ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!