×

வேலூர் மாநகராட்சியில் 80 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மண்ணில் புதைத்து அழிப்பு

வேலூர், டிச.9: வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் 80 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மண்ணில் புதைத்து அழித்தனர். காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் 2 பைகள் இருப்பது தெரிய வந்தது. அதனை சோதனையிட்டபோது, அதில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து அதிலிருந்த 40 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை 1வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுரளியிடம் ஒப்படைத்தனர். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்த 40 கிலோ என்று மொத்தம் 80 குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், காட்பாடி காந்தி நகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கட்டிட வளாகத்தில் சுகாதார அலுவலர் பாலமுரளி மற்றும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், கந்தவேலு ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குட்கா பாக்கெட்டுகள் கிழித்து மண்ணில் புதைத்து அழித்தனர்.

Tags : Vellore ,municipality ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...