×

நாசரேத் அருகே மணிநகர் பிரசன்ன ஆலய பிரதிஷ்டை விழா

நாசரேத்,ஜன.9: நாசரேத் அருகே உள்ள மணிநகர் பிரசன்ன ஆலய 51வது பிரதிஷ்டை மற்றும் 36வது அசன பண்டிகை நிகழ்ச்சி 7 நாட்கள் நடந்தது.
 முதல் 3 நாட்கள் ஆலய வளாகத்தில் கன்வென்ஷன் கூட்டம் நடந்தது. சென்னை குருவானவர் ஜெய்ஹர் தாமஸ் தேவசெய்தி கொடுத்தார். 4வது நாள் மாலை 5 மணிக்கு ஆயத்த ஆராதனை நடந்தது. தூய யோவான் பேராலய உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ் தேவசெய்தி கொடுத்தார். இரவு 7 மணிக்கு பார்வையற்றோர் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 5வது நாள் காலை 5 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, திருவிருந்து ஆராதனை நடந்தது. தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ் தேவ செய்தி கொடுத்தார். அன்று மாலை 5 மணிக்கு ஞானஸ்நான ஆராதனை நடந்தது.

6வது நாள் காலை 5 மணிக்கு அசன வேலை ஆயத்த ஜெப நிகழ்ச்சி நடந்தது. அன்று மாலை 5 மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. குருவானவர் எட்வின் ஜெபராஜ் ஜெபித்து தொடங்கி வைத்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். 7வது நாள் இரவு 7மணிக்கு வேதநாயகம் குழுவினரின் பஜனை பிரசங்கம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவி குருவானவர்கள் இஸ்ரவேல் ஞானராஜ், ரெனால்டு பாஸ்கரன், சபை ஊழியர் சர்ச்சில் மோசஸ், மற்றும் சபை மக்கள் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Dedication ceremony ,temple ,Maninagar Prasanna ,Nazareth ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு