எட்டயபுரத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு ரிப்ளக்டர் ஸ்டிக்கர் வழங்கல்

கோவில்பட்டி, ஜன.9: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வலியுறுத்தி எட்டயபுரத்தில் காவல்துறை சார்பில் அவர்களின் கைப்பைகளில் சிவப்பு பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அறுபடை வீடுகளின் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மார்கழி, தை மாதங்களில் மதுரை, விருதுநகர், திருமங்கலம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு மார்கழி மற்றும் தைமாதத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் எட்டயபுரம் காவல்நிலையம் சார்பில் எட்டயபுரம் பிரதான சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ரோட்டரி சங்க மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துசெல்வம் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். எட்டயபுரம் காவல்நிலைய காவலர் செல்லச்சாமி வரவேற்றார். எட்டயபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் பாதயாத்திரைகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, அவர்களின் கைப்பைகளில் சிவப்பு பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை ஒட்டி பயணத்தை தொடங்கி வைத்தார். காவலர் மூக்கையா உட்பட பாதயாத்திரை பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பாதயாத்திரை பக்தர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Related Stories:

>