×

தூத்துக்குடி பெரிசன் பிளாசா நவீன திரையரங்கில் இன்று தர்பார் படம் வெளியீடு

தூத்துக்குடி, ஜன.9:  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் போல்பேட்டையில் செயல்பட்டு வரும் பெரிசன் பிளாசா வளாகத்தில் பெரிசன் சினிமாஸ் ஸ்கிரீன் 1, ஸ்கிரீன் 2 என்ற இரண்டு திரையரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய திரையரங்கம் இன்று (வியாழன்) முதல் செயல்படவுள்ளது. இதில் முதல் திரைப்படமாக ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ஆன்லைனிலும் டிக்கெட் நியூ என்ற வெப்சைட் மூலம் முதல் நாளே நூற்றுக்கணக்கானோர் புக்கிங் செய்தனர். இதுகுறித்து தியேட்டர் நிர்வாகி என்.பி.ஜெகன் கூறியதாவது, ‘தூத்துக்குடியில் முதல் முறையாக லேசர் தொழில்நுட்பத்துடன் டால்பி அட்மோஸ் வடிவமைப்பில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திரையரங்கில் 248 இருக்கைகளும், மற்றொரு திரையரங்கில் 211 இருக்கைகளும் உள்ளன.

விசாலமான இருக்கைகள், காட்சிகளுக்கு ஏற்ப கேட்கும் ஒலி அமைப்பு, துல்லியமான ஒளி அமைப்பு மற்றும் சிறப்பான பார்க்கிங் வசதி என பல்வேறு வசதிகள் பெரிசன் பிளாசா மல்டிபிளக்ஸ் திரையரங்கில் உள்ளது. ரசிகர்கள் வெளியிலிருந்து எந்த பொருட்களும் கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டார்கள். திரையரங்கு வளாகம் முழுவதும்  கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Thoothukudi ,Perth Plaza Modern Theater ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...