மாற்றுத்திறனாளிகளுக்கு தலைக்கவசம்

வானூர், ஜன. 9: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தலைக்கவசங்களை எஸ்.பி ஜெயக்குமார் வழங்கினார். ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் கலந்துகொண்டு 40 பேருக்கு இலவச தலைக்கவசங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய்தங்கம், ஆரோவில் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED காதல் மனைவிக்கு தெரியாமல் 2ம் திருமணம்...