விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்ஐ எழுத்துத்தேர்வு ஒத்திவைப்பு

விழுப்புரம், ஜன. 9:  விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமத்தால் எஸ்ஐ காலி பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு (காவல்துறையினருக்கு) வரும் 11ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால், இத்தேர்வு வரும் 13ம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறுகிறது. மேலும் அனைத்து துறை ரீதியான விண்ணப்பதாரர்களும் எழுத்துத்தேர்விற்குரிய மாற்றம் செய்யப்பட்ட அழைப்பு கடிதத்தினை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் குழுமம் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags : SI election ,Villupuram ,district ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் முகாம் ஒத்திவைப்பு