×

விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஆட்சியர் அதிரடி ஆய்வு

விழுப்புரம், ஜன. 9:  விழுப்புரம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அண்ணாதுரை, தூய்மையாக வைத்திருக்க வேண்டு
மென உத்தரவிட்டார். விழுப்புரம் புதிய பேருந்துநிலையத்தில் நேற்று ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆணையர் தட்சிணாமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் உடன் சென்றனர். பேருந்து நிலையத்தில் இருந்த கழிப்பறைகளுக்குச் சென்று பார்வையிட்ட அவர், சுகாதாரமற்று, டைல்ஸ்கள் உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிருப்தியடைந்தார். உடனடியாக அருகிலிருந்த ஆணையரிடம், பயணிகளுக்கான கழிப்பறையை இப்படியா பராமரிப்பது என்று கேள்வி எழுப்பியவர் ஒப்பந்தம் எடுத்தவர்களை அழைத்து முறையாக பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்துமாறு கூறினார். மேலும் உடைந்துபோன டைல்ஸ்களை மாற்றி புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ளவும் நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்திற்கு சென்வர் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் 16 கடைகளை ஆய்வு செய்த ஆட்சியர், பயணிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் கட்டப்
படுகிறதா? அளவு, கட்டிமுடித்த பின்னர் யாருக்கு, எந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்படும் என்று ஆணையரிடம் கேட்டறிந்தார்.

மேலும் பணிகள் தரமானதாக நடைபெறுகிறதா? எனவும் ஆட்சியர் கேட்டறிந்தார். இதனிடையே பேருந்து நிலையத்தில் சாக்கடை கால்வாய் ஓரமாக டீக்கடையில் சுகாதாரமற்ற முறையில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்வதை பார்த்த அவர் உணவு பாதுகாப்புத்துறையினர் என்ன செய்கிறார்கள். ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கு மாறும் உத்தரவிட்டார். பின்னர் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பிஎன்தோப்பு மேல்நிலை பள்ளிக்குச்சென்ற ஆட்சியர், மாணவர்களின் கல்வித்திறனை சோதித்தார். மேலும் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை கேட்டறிந்து, தற்போதைய ஆண்டில் அதிகரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்திடவும், தேர்ச்சி குறைந்த மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி அளிக்குமாறும் உத்தரவிட்டார்.

Tags : Collector ,Action Inspection ,Villupuram Bus Station ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...