×

விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்

காட்டுமன்னார்கோவில், ஜன. 9: காட்டுமன்னார்கோவிலில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தனித்தனியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மணிவாசகம் தலைமையிலான சங்கத்தினர் காட்டுமன்னார்கோவில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்து தெற்கு வீதி சந்திப்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் உத்தரவின்பேரில் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட இந்திய விவசாய சங்கத்தினரை கைது செய்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திட்டக்குடி: திட்டக்குடி வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திட்டக்குடி பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் விவசாய சங்க வட்ட செயலாளர் மகாலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதை தொடர்ந்து திட்டக்குடி டிஎஸ்பி தங்கவேல், இன்ஸ்பெக்டர் பிரியா சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்ஷாமற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர்.இதேபோல், முஷ்ணம் கிளை தபால் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...