×

மார்கழி பெருந்திருவிழா சுசீந்திரம் கோயிலில் இன்று தேரோட்டம்

சுசீந்திரம், ஜன.9: சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் மார்கழி திருவிழாவின் 9ம் நாளான இன்று தேரோட்டம் நடக்கிறது.  சுசீந்திரம்  தாணுமாலயசுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழாவின் 7ம் நாளான நேற்றுமுன்தினம் அதிகாலை 5  மணிக்கு பல்லக்கில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30  மணிக்கு நடராஜர் சுவாமிக்கு திருச்சாந்து சார்த்தல், மாலை 5 மணிக்கு ஊஞ்சல்  மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு மண்டக படியும், இரவு 10.30 மணிக்கு  கைலாசபர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலா வருதல், 12 மணிக்கு சிவசக்தி  விநாயகர் கோயில் முன்பு அன்னாதனம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில் 8ம்  நாளான நேற்று காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதியுலா வரும் நிகழ்ச்சி,  ேபரம்பலம் திருக்கோயில் முன்பு நடராஜ பெருமானின் ஆனந்த திருநடன காட்சி, 10  மணிக்கு அலங்கார மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும்  அஷ்டாபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கார மண்டபத்தில் அஷ்டாபிஷேகம், 5  மணிக்கு யானை பலி, இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதியுலா வரும்  நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று  (9ம் தேதி) நடக்கிறது. இரவு 11  மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல்,  12 மணிக்கு தனது தாய் தந்தையுடன்  திருவிழாவில் பங்கேற்ற பின் மக்கள்  மார்கள் பிரிந்து செல்லும் சப்தாவர்ண  காட்சியும் நடக்கிறது. 10ம் நாள்  விழாவான 10ம் தேதி காலை 4 மணிக்கு  நடராஜ மூர்த்திக்கு அஷ்டாபிஷேகம்,  ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இரவு 9  மணிக்கு திருஆராட்டு நடக்கிறது.  சுசீந்திரம் கோயில் தேரோட்டத்தையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : celebration ,Suchindram Temple ,Makkali ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்