×

கிருஷ்ணகிரி அணையின் 2 பிரதான மதகுகள் முழுவதும் வெட்டி அகற்றம்

கிருஷ்ணகிரி, ஜன.8: கிருஷ்ணகிரி அணையின் 2 பிரதான மதகுகள் முழுவதும் வெட்டி அகற்றப்பட்டது. கிருஷ்ணகிரி அணையின் பிரதான 7 மதகுகளையும் அகற்றி ₹19 கோடியே 7 லட்சம் மதிப்பில் புதியதாக மதகுகள் அமைக்கப்படுகிறது.
இதற்காக பழைய 7 மதகுகளையும் வெட்டி அகற்றும் பணிகள் கடந்த 3 தேதி துவங்கியது. இதற்காக மதகுகளை வெல்டிங் வைத்து, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கும் பணியில் 23 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அணையின் இரண்டு மற்றும் மூன்று ஆகிய இரண்டு மதகுகளையும் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டன. அடுத்த கட்டமாக நான்கு, ஐந்து மற்றும் ஆறு ஆகிய மதகுகளை வெட்டி எடுத்து வருகின்றனர். இப்பணிகள் வேகமாக நடந்து வருவதால், இன்னும் ஒரு வாரத்தில் 7 மதகுகளையும் முழுவதுமாக வெட்டி அகற்றும் பணி முடிந்துவிடும். அதன் பிறகு புதிய மதகுகளை இரண்டு, இரண்டாக பொருத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் மொத்த உயரமான 52 அடியில், நேற்று 31.60 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. அணைக்கு வரும் 158 கன அடி தண்ணீரை, பாசன கால்வாய் மூலம் திறந்துவிடப்பட்டு வருகிறது.

Tags : sites ,Krishnagiri Dam ,
× RELATED மேலும் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு