×

பெரிய வெங்காயம் விலை குறைந்தது

தர்மபுரி, ஜன.8: தர்மபுரியில் பெரிய வெங்காயம் கிலோ ₹62க்கு விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் 100க்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதமாக வெங்காயம் வரத்து குறைந்ததையடுத்து, வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கடந்த வாரம் தர்மபுரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ₹140க்கும், சின்ன வெங்காயம் ₹125க்கும்  விற்பனையானது. தொடர்ந்து வெங்காயம் வரத்து அதிகமாக இருப்பதால், விலை குறைய தொடங்கியது. நேற்று பெரிய வெங்காயம் விலை கிலோ ₹62க்கும், சின்ன வெங்காயம் கிலோ ₹102க்கும் விற்பனையானது. 

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா