×

காரிமங்கலம் சந்தையில் ₹1.4கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை

காரிமங்கலம், ஜன.8: காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வார சந்தை நடந்து வருகிறது. நேற்று கூடிய காரிமங்கலம் சந்தையில் ஆடுகளின் விலை அதிகரித்தே காணப்பட்டது. 700 ஆடுகள் விற்பனைக்கு வந்தது, அதில் 600 ஆடுகள் ₹6000 முதல் ₹8000வரை என ₹36லட்சத்திற்கு விற்பனையானது. மாடுகள் 500க்கும் குறைவாக  விற்பனைக்கு வந்தது, அதில் 400 மாடுகள் ₹30ஆயிரம் முதல் ₹40ஆயிரம் வரை என ₹60 லட்சத்திற்கு விற்பனையானது. தேங்காய் வரத்து குறைந்து 50ஆயிரம் காய்களே விற்பனைக்கு வந்தது. ஒருகாய் ₹10, ₹12, ₹14க்கு என மொத்தம் ₹8லட்சத்திற்கு விற்பனையானது.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்