×

மல்லசந்திரம் பஞ். தலைவராக சுரேகா முனிராஜ் பதவியேற்பு

தேன்கனிக்கோட்டை, ஜன. 8: தேன்கனிக்கோட்டை அருகே மல்லசந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுரேகா முனிராஜ், மஞ்சுளா வெங்கடஜலபதிசெட்டி ஆகியோர் போட்டியிட்டனர். சுரேகா முனிராஜ் 1612 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  நேற்று முன்தினம் மல்லசந்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் உதவி தேர்தல் அலுவலர் ருத்ரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவராக சுரேகாமுனிராஜுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் மல்லசந்திரம் ஊராட்சியை சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுரேகாமுனிராஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தன்னை மல்லசந்திரம் ஊராட்சி தலைவராக தேர்வு செய்த வாக்காளர்கள் மற்றும் கிராம மக்களுக்கு சுரேகாமுனிராஜ் நன்றி தெரிவித்தார்.

Tags : Sureka Muniraj ,President ,
× RELATED இனிமேல் வாழ்க்கையில் விமான...