×

தர்மபுரியில் மகாராஷ்டிரா கொய்யா

விற்பனை அமோகம்தர்மபுரி, ஜன.8: தர்மபுரியில் மகாராஷ்டிரா கொய்யாப்பழம் கிலோ ₹80க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொய்யாப்பழம் சிறந்த மலமிளக்கியாக செயல்படுவதால், அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக உள்ளது. ஆப்பிள் போன்ற வடிவில் கொய்யாப்பழம் மகாராஷ்டிராவில் இருந்து தர்மபுரி நகர சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஆப்பிள் போன்று மிருதுவாக உள்ளதாலும், சுவையாக இருப்பதால் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். தர்மபுரி நகரில் ராஜகோபால் பூங்கா, நேதாஜி பைபாஸ் சாலை, அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ மகாராஷ்டிரா கொய்யாப்பழம் ₹80வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Maharashtra koya ,Dharmapuri ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...