×

பழைய தர்மபுரி பஞ். தலைவர் பதவியேற்பு

தர்மபுரி, ஜன.8: பழைய தர்மபுரி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற தலைவராக சிவலிங்கம் மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா நேற்று முன்தினம் பழைய தர்மபுரியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. விழாவில் உதவி தேர்தல் அலுவலர் கனிமுத்து முன்னிலையில், புதிய தலைவர் சிவலிங்கத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய வார்டு உறுப்பினர்களாக சௌந்திரவள்ளி, பூங்கா, சீனிவாசன், கல்பனா, கேசவன், சிவமூர்த்தி, தமிழ்செல்வி, தமிழ்விழி, விக்னேஷ், சுப்ரியா உள்ளிட்ட அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு முக்கிய பிரமுகர்கள், ஊர்பொதுமக்கள், ஊராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.                           

Tags : Dharmapuri Panj ,president ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...