×

லளிகம் ஏரிக்கரை சாலையில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தல்

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி மாவட்டம் லளிகம் ஏரிக்கரை சாலையில், சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பங்களை சீரமைக்க, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி - லளிகம் ஏரிக்கரை சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து லளிகம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்கம்பங்கள் சாய்ந்த  நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2 மாதத்திற்கு முன் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்கம்பம் சாய்ந்த நிலையில், மின்கம்பியின் பலத்தால் நிற்கிறது. எனவே மின்வாரியம் உடனே ஆய்வு செய்து, மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.

Tags : reorganization ,Lalikam Lake ,road ,
× RELATED ஆப்பனூர் விவசாய நிலங்களில் ஆபத்தான மின் வயர்கள், கம்பங்கள்