பாத்திர வியாபாரி கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் வாலிபர் சரண்

நெல்லை, ஜன.8: சேரன்மகாதேவி பத்திர வியாபாரி கொலையில் தொடர்புடைய வாலிபர் நெல்லை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். சேரன்மகாதேவி கோட்டவிளை தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் மாரியப்பன் (30). அதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் பாத்திர கடை நடத்தி வந்தார். இவரை வீரவநல்லூர் உப்பாத்து காலனியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே கடந்த ஆண்டு செப். 16ம் தேதி மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக சேரன்மகாதேவியை சேர்ந்த சுரேஷ் (29) என்ற வாலிபர் நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க  மாஜிஸ்திரேட் பாபு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் சுரேசை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: