×

சிவகிரி பகுதிகளில் திடீர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

புளியங்குடி, ஜன.8: சிவகிரி பகுதிகளில் நள்ளிரவில் பெய்த திடீர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தது. விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர். சிவகிரி பகுதிையச் சேர்ந்தவர் விவசாயத்தையும் அதனை சார்ந்த  கூலித்தொழிலையும் நம்பியுள்ளனர். விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சேமித்து வைக்க அணைகள் ஏதுவும் இல்லாததால் கிணற்று  பாசனம் மற்றும் ஏரி பாசனம், மழை நீரினை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.இந்தாண்டு இப்பகுதியில் பருவமழை பின்தங்கியதால் நாற்று நடவு செய்யும் பணி தாமதமானது. சிவகிரி அருகேயுள்ள கோனார்குளம், தேவிபட்டணம், செங்குளம், ராசிங்கப்பேரி குளம் உருவாட்டிகுளம், முத்தூர் குளம்  உள்பட பல்வேறு பகுதிகளில் குறுகிய கால நெற்பயிரான அம்மன் பொன்னி எனும் ரகத்தினை பயிரிட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் இப்பகுதிகளில்  பெய்த திடீர் மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்தது. மேலும் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்ததால் வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடைக்கு தயாரான ெநற்பயில்கள் தண்ணீரில் மூழ்கியது.கடன் பெற்று சாகுபடி செய்த நிலையில் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். எனவே வருவாய் துறையினர், வேளாண்மை அதிகாரிகள் சேதமுற்ற பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : rainfall ,areas ,Sivagiri ,paddy fields ,
× RELATED குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது