×

வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு நெல்லையில் ஜன.10ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை, ஜன. 8: நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 10ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால்  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் சிறிய அளவிலான  தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த வாரம் வருகிற 10ம் தேதி காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடக்கிறது. இம்முகாமில் தனியார்  நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக வந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். தனியார் வேலைவாய்ப்பு முகாமில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடக்கும் இந்தத் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பதிவுதாரர்கள் 10ம் தேதி காலை 10.30 மணிக்கு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும்.  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை விவரங்களை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரிலோ அல்லது 0462-2500103 என்ற தொலைபேசி எண்ணிலோ தேர்வு செய்யப்படவுள்ள வேலைநாடுநர்களின் தேவை குறித்து உடனே தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : employment camp ,Employment Office ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்