×

கோவில்பட்டி அருகே காளாம்பட்டி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


கோவில்பட்டி, ஜன.8:   கோவில்பட்டி அருகே காளாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியானது, இதற்கு முன்பு இந்து உயர்நிலைப்பள்ளி என அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டது. இந்த பள்ளியில் கடந்த 1963ம் ஆண்டு முதல் 1974 வரை பயின்ற அப்போதைய எஸ்எஸ்எல்சி படித்த மாணவ, மாணவியர் தற்போது ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் என பல்வேறு பணிகளில் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.  இந்நிலையில் இப்பள்ளி வளாகத்தில் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. தாங்கள் படிக்கும்போது தலைமையாசிரியாக இருந்த ராதாகிருஷ்ணனை நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து வந்து கவுரவித்தனர். மேலும் அனைவரும் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது ஒவ்வொரு காலகட்டங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.  

   இதுகுறித்து கோவில்பட்டி லட்சுமிமில் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆழ்வார்சாமி கூறுகையில்; என்னுடன் படித்த மாணவர்களை சந்திக்க வேண்டும் என எண்ணம் ஏற்பட்டது. இதற்கு பெரும் உதவியாக இருந்தது வாட்ஸ்அப் தான். இதன் மூலம் என்னுடன் பயின்ற நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். இதற்கு 3 மாதங்கள் ஆகியது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.   விழாவில் 85 வயதிற்கு மேலாக உள்ள எங்களது ஆசிரியர்கள் 16 பேரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவர்களை அழைத்து வந்து கவுரவித்துள்ளது பெருமையாக உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் குறைந்த வயது 60, அதிகம் 75 வயது ஆகும். இங்கு வந்தபோது யாரையும் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அடையாளம் கண்டு எங்களது பள்ளி கால நிகழ்வை பகிர்ந்து கொண்டோம்’ என்றார்.  

Tags : Alumni ,Kalambatti school ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!