×

சாத்தான்குளத்தில் 14 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

சாத்தான்குளம், ஜன.8: சாத்தான்குளம் ஒன்றியத்தில் 14 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றனர்.  சாத்தான்குளம் ஒன்றியத்தில் அதிமுகவில்  9பேரும், திமுக கூட்டணியில் 3பேரும், சுயேட்சை 2பேர் வெற்றி பெற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற 14பேர் பதவியேற்பு விழா யூனியன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மீனா, லதா, சுதாகர், ப்ரெனிலா கார்மல், சுபாகிறிஸ்டி பொன்மலர், சேசுஅஜிட் ஆகியோர் பதவியேற்க வந்திருந்தனர். மீதமுள்ள 8 உறுப்பினர்கள் பதவியேற்க வரவில்லை. சுமார் அரைமணி நேரத்துக்கு பிறகு  8பேரும் ஒரு காரில் வந்து இறங்கினர். இதையடுத்து மூத்த உறுப்பினராக லதாவுக்கு  தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி திட்ட அலுவலர் ஜான்கென்னடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து அனைத்து  ஒன்றியக்குழு உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.  ஒன்றிய ஆணையாளர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதவியேற்பு முடிந்ததும் சுயேட்சை  உறுப்பினர் குருசாமி,  உள்ளிட்ட  8பேர் அதே வாகனத்தில் திரும்பி சென்றனர். விழாவில் ஒன்றிய அதிமுக செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவபாண்டியன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், நகர திமுக செயலாளர் இளங்கோ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ், சங்கர், உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : committee members ,Union ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...