×

தூத்துக்குடி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் பதவியேற்பு

நாசரேத்,ஜன.8:  தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.ஆழ்வார்திருநகரி ஒன்றியம் கச்சனாவிளை பஞ்சாயத்து தலைவராக கிங்ஸ்டன் மீண்டும்  தேர்வு செய்யப்பட்டார். அவர் பதவியேற்பு நிகழ்ச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யாபாலா முன்னிலையில் பஞ்சாயத்து தலைவராக கிங்ஸ்டன் பதவியேற்று கொண்டார். இதனை தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் 1வது வார்டு ஜோன்ஸ்பிரின், 2வது வார்டு பாக்கியராணி, 3வது வார்டு அமுதா, 4வது வார்டு ஷீலா ஜெபராஜ், 5வது வார்டு ஷர்மிலி, 6வது வார்டு செல்வம் விஜி, 7வது வார்டு குரூஸ் கின்ஸ்டன், 8வது வார்டு கிறிஸ்டோபர் அருள்ராஜ், 9வது வார்டு தெய்வகனி ஆகிய 9 பேரும் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆழ்வை ஒன்றிய கவுன்சிலர் பியூலா ரத்தினம் விஜயராஜா, தொழிலதிபர்கள் முத்துராஜ், ஞானசெல்வன், ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் ரத்தினதுரை, வழக்கறிஞர் சிவக்குமார், முன்னாள் உபதலைவர் தங்கராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானபேர் கலந்து கொண்டனர்.

 குறிப்பன்குளம் பஞ்சாயத்து தலைவியாக சிவந்திகனி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செண்பககுமார் முன்னிலையில் பதவியேற்றார். தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் 1வது வார்டு முத்துகுமார், 2வது வார்டு குணசேகரன், 3வது வார்டு வெங்கடேசன், 4வது வார்டு   செல்லத்தாய், 5வது வார்டு சக்திக்கனி, 6வது வார்டு மகேஷ்வரி ஆகிய 6பேரும் பதவியேற்றுக்கொண்டனர். உடையார்குளம் பஞ்சாயத்து தலைவராக தேவராஜ் செல்லையா பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில் குருவானவர் ஆசீர் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்தார். ஆழ்வை ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜ் நாராயணன் தலைமை வகித்தார். ஊர் பெரியவர் பாலசிங் வரவேற்றார். நாசரேத் நகர செயலாளர் கிங்சிலி, சின்னமதிக்கூடல் நாட்டாமை குணசேகர், சென்னை வாழ் உடையார்குளம் கிறிஸ்தவ மற்றும் இந்து சங்கத்தைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஞானசேகர் நன்றி கூறினார்.

மூக்குப்பீறி பஞ்சாயத்து தலைவியாக கமலா கலைஅரசு தேர்தல் அலுவலர் அஜித் முன்னிலையில் பதவியேற்றார். இதை தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பொன்ராணி, பிச்சைகனி, ஜெயகிரேஷ், தனசிங், பாலசுந்தர், அந்தோணி கிறிஸ்டி, பாக்கியசீலி, கலைஅரசு, கனல் ஆறுமுகம் ஆகியோரும் பதவியேற்று கொண்டனர்.ஏரல்: ஏரல் அருகே ராஜபதி பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற சவுந்தரராஜன் உதவி தேர்தல் அலுவலர் ராம்திலகா முன்னிலையில் பதவியேற்றார். இதையடுத்து உறுப்பினர்கள் 1வது வார்டு ராமச்சந்திரன், 2வது வார்டு மாரியம்மாள், 3வது வார்டு செல்வம், 4வது வார்டு தங்கம், 5வது வார்டு ரெதினா, 6வது வார்டு மாரியப்பன் ஆகியோர் பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியில் செயல்
அலுவலர் திருமால் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

ஏரல் அருகே சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேங்கையன், உதவி தேர்தல் அலுவலர் அருணா முன்னிலையில் பதவியேற்றார். இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் 1வது வார்டு ஜமுணராணி, 2வது வார்டு நித்யாராணி, 3வது வார்டு இப்ராகிம்ஷா, 4வது வார்டு ஆயிஷாபீவி, 5வது வார்டு செந்தூர் பாண்டியன், 6வது வார்டு மன்சூராபேகம் ஆகியோரும் பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியில் திரளனா ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:  திருச்செந்தூர் யூனியனுக்குட்பட்ட நல்லூர் பஞ்சாயத்தில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நல்லூர் பஞ்., அலுவலத்தில் தலைவர் சித்ராபரிசமுத்து மற்றும் 1வது வார்டு உறுப்பினர் கீதாஜெயக்குமார், 2வது வார்டு உறுப்பினர் மனோகரன், 3வது வார்டு உறுப்பினர் செல்வராஜ், 4வது வார்டு உறுப்பினர் பேச்சியம்மாள்ஆனந்தன், 5வது வார்டு உறுப்பரினர் ராஜேஸ்வரிஅங்கப்பன், 6வது வார்டு உறுப்பினர் சிவகாமி சுந்தர் வீரசுப்பிரமணியன், 7வது வார்டு உறுப்பினர் பரிசமுத்து, 8வது வார்டு உறு ப்பினர் முத்துக்குமார், 9வது வார்டு உறுப்பினர் வனப்பேச்சியம்மாள் ஆகியோருக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மணி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து நல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்கு பார்வேடு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் வை.சுரேஷ் தலைமை வகித்தார். நல்லூர் முன்னாள் பஞ்., தலைவர் பரிசமுத்து வரவேற்றார். இதில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமலட்சுமி, நல்லூர் வடிவேல், முன்னாள் பஞ்., தலைவர்கள் நாலுமாவடி பிரபாகரன், அங்கமங்கலம் முருகேசன், வீரமாணிக்கம் சுந்தர், நல்லூர் விவசாய சங்க தலைவர் ஆறுமுகம், மதிமுக கருப்பசாமிபாண்டியன், குரும்பூர் எஸ்ஐ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்:  ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவராக திமுக பிரமுகரும் தொழிலதிபருமான முப்புலிவெட்டி கிராமத்தை சேர்ந்த இளையராஜா பதவியேற்றார். தொடர்ந்து 12 வார்டுகளின் உறுப்பினர்கள் அனைவருக்கும் உதவி தேர்தல் அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைக்க அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.  பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கமலாதேவி யோகராஜ் பஞ்சாயத்து தலைவராகவும் வார்டு உறுப்பினர்களாக 9 பேரும் பதவி ஏற்றனர்.   பசுவந்தனை அருகே உள்ள சில்லாங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் பஞ்சாயத்து தலைவராக சரோஜா கருப்பசாமியும் வார்டு உறுப்பினர்களாக 9 பேரும் பதவி ஏற்றனர். இவர்களுக்கு உதவி தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழச்சியில் முத்துக்கருப்பன் பள்ளிகள் மற்றும் கல்லூரி தாளாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊராட்சிக்குட்பட்ட சில்லாங்குளம், ஓம்.சரவணபுரம், சுப்பம்மாள்புரம், பரமன்பச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

வைகுண்டம்: வைகுண்டம் அருகேயுள்ள பத்மநாபமங்கலம் பஞ்சாயத்து தலைவராக சிவகாமிவைகுண்டபாண்டியனும், வார்டு உறுப்பினர்களாக பத்மாவதி, கருப்பசாமி, மாரியம்மாள், மாரிமுத்து, இசக்கியம்மாள், வீரசுந்தரி, முத்துபலவேசம், பாலசுப்பிரமணியன், வைகுண்டபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தேர்தல் அலுவலர் அபர்ணா முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டனர். பத்மநாபமங்கலம் பஞ்சாயத்து தலைவர் சிவகாமி வைகுண்டபாண்டியன் மற்றும் 9வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றியும், தேர்தல் இன்றியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags : leaders ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...