×

11 இடங்களில் சிறப்பு குறைதீர் முகாம் 10ம் தேதி நடக்கிறது

திருச்சி, ஜன.8: திருச்சி மாவட்டத்தில் வரும் 10ம் தேதி வருவாய்த்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட வருவாய்த்துறை சார்பில் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு கிராமம் தேர்வு செய்து அந்த கிராமங்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வருவாய்த்துறை அலுவலர்கள் முகாமிட்டு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்பஅட்டை, நிலம் சம்பந்தமான பிரச்னைகள் ஆகியவற்றை அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்படும். அதன்படி வரும் 10ம் தேதி திருச்சி (கிழக்கு) தாலுகாவில் தேவதானம், திருச்சி மேற்கில் புத்தூர், திருவெறும்பூரில் குவளக்குடி, ரங்கத்தில் கொடியாலம், மணப்பாறையில் சாம்பட்டி, மருங்காபுரியில் அயன்புதுப்பட்டி, லால்குடியில் புதூர்பாளையம், மண்ணச்சநல்லூரில் சமயபுரம், முசிறி திண்ணனூர், துறையூர் நடுவலூர், தொட்டியம் காமலாபுரம் ஆகிய இடங்களில் வருவாய்த்துறை சிறப்பு முகாம் நடக்கிறது. பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு திருச்சி கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : grievance camp ,locations ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு