×

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு பேரணி, ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை, ஜன.8: திருவாரூர்மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதயமார;த்தாண்டபுரம் நாச்சிக்குளத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், ரத்து செய்யக் கோரியும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர்பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் முன்னதாக ஜமாஅத் தலைவர் தஸ்தகீர் தலைமையில் நாச்சிக்குளம் முகைதீன் பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தேசிய கொடியை ஏந்தி பங்கேற்றனர். தொடர்ந்து பேரணி முகைதீன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டு நடுத்தெரு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வந்து நாச்சிக்குளம் கடைத்தெருவிற்கு வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மக்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும், சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்வழக்கறிஞர்அஸ்ரப்அலி வரவேற்று பேசினார். சிறப்பு பேச்சாளராக இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாக குழு உறுப்பினர்லெனின் கலந்துகொண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத போக்கை சுட்டிக்காட்டி பேசினார். அதனை தொடர்ந்து தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹீப், திமுக ஒன்றிய செயலாளர்மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர்முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். இதில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி,உட்பட அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், இஸ்லாமிய பெண்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மஜக மாநில செயலாளர்தாஜிதீன் நன்றி கூறினார். போராட்டத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க திருவாரூர் ஏடிஎஸ்பி அன்பழகன், மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர்ராஜேஷ் உட்பட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : rally ,Islamic Federation ,demonstration ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி