×

திருக்காரவாசலில் பதவியேற்ற ஒரே நாளில் சாலை சீரமைக்கும் பணி

திருவாரூர், ஜன. 8: திருவாரூர் அருகே திருக்காரவாசலில் பதவி ஏற்ற ஒரே நாளில் ஊராட்சி மன்ற தலைவர் சாலையை சீரமைக்கும் பணியினை மேற்கொண்டதால் கிராம மக்கள் அவரை பாராட்டினர். தமிழகத்தில் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி பதவிகளுக்கான காலம் முடிவடைந்த நிலையில் அதன் பின்னர் 3 ஆண்டு காலமாக இந்த தேர்தல் நடத்தப்படாதன் காரணமாக மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப தமிழக அரசு கடந்த மாதம் இந்த உள்ளாட்சித் தேர்தலை ஊரக பகுதிகளுக்கு மட்டும் நடத்தி முடித்தது. இந்நிலையில் இடைப்பட்ட 3 ஆண்டு காலத்தில் அனைத்து கிராமங்களிலும் கோரிக்கைகள் என்பது அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த கோரிக்கைகளில் முதலில் எதை நிறைவேற்றுவது என்று பல்வேறு குழப்பங்கள் வேட்பாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. இருப்பினும் தங்களால் முடிந்த காரியங்களை செய்து முடிப்பதாக வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில் பொதுமக்கள் அவர்களை தேர்வு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற தலைவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் பதவியேற்ற நாளிலேயே தங்களது கிராமங்களில் குளங்களை சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது, தெருவிளக்குகளை எரிய விடுவது என கிராமங்களின் முக்கிய பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். அதன்படி திருவாரூர் அருகே திருக்காரவாசல் ஊராட்சியில் அக்கரை கோமல் பகுதியில் இருந்து வரும் சாலை மிகவும் சேறும், சகதியுமாக இருந்துவந்தது. இந்நிலையில் அந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுகவை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உடனடியாக அந்த சாலையில் உள்ள சேறுகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டார்.இதற்கு அவருக்கு கிராம மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ஊராட்சி தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு பொதுமக்கள் தங்களிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் பெருகினாலும் பெரும்பாலானவர்கள் தற்போது வரையில் இந்த பொங்கல் பண்டிகையை மண்பானையும்,மண் அடுப்பையும் கொண்டு பழமை மாறாமல் கொண்டாடும் நிலை இருந்து வருகிறது.படம் 5 முதல் 8 வரை பொங்கல் முன்னிட்டு திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் மன் அடுப்புகள் விற்கனைகாக வைக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...