×

நீடாமங்கலம் முதல் மன்னார்குடி வரை ரயில் பாதையை மின்மயமாக்க வேண்டும்

மன்னார்குடி, ஜன. 8: நீடாமங்கலம் முதல் மன்னார்குடி வரை உள்ள ரயில் பாதையை மின் மய மாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மன்னார்குடியில் நடைபெற்ற நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் மன் னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கோவிந்த ராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சம்பத் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் தீர்மானங்களை முன்மொழிந்தும் பேசினார்.கூட்டத்தில், மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் தற்காலிகமாக திருவாரூர் வரை ஒரு மாதம் இயக்கப் படும் பட்சத்தில் அந்த வழித்தடத்திற்கு பதிலாக பொங்கலை முன்னிட்டு மேற்படி ரயிலை மன்னார்குடியிலிருந்து திருச்சி வரை இம்மாதம் வரை இயக்க வேண்டும்.நீடாமங்கலம் முதல் மன்னார்குடி வரை ரயில் பாதை மின் மயமாக்கப்பட வேண்டும். மன்னார்குடி முதல், கோவை வரை செல்லும் செம்மொழி விரைவு ரயில் பகலில் மன்னார்குடியில் இருந்து கரூர் வரை இயக்க வேண் டும். மன்னார்குடியில் இருந்து பெங்களூருக்கு புதிய ரயிலை இயக்க வேண்டும். .மன்னார்குடி. ரயில் நிலையத்தில் மின் விளக்குகள் முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் பழுதடைந்த நடை மேடைகள் சரி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக செயற் குழு உறுப்பினர் தான்யா வரவேற்றார். முடிவில் ராம சாமி நன்றி கூறினார்.

Tags : Needamangalam ,Mannargudi ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...