×

இன்று அகில இந்திய வேலை நிறுத்தம் அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்க அழைப்பு

வலங்கைமான்,ஜன.8: இன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்க அதன் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மாநில அரசுகள் மக்கள் விரோத, ஊழியர் விரோத பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றது. மேலும் அரசு வேலைகளை முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டு அனைத்து துறைகளையும் தனியாருக்குதாரை வார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இன்று நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர் சங்கம் பங்கேற்கின்றது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும், மத்திய மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவும்,புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திடவும், அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி பொதுவிநியோக முறையை பலப்படுத்தவும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர் சங்கம் முன்னிறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றது. எனவே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : India ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!