கும்பகோணத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கும்பகோணம், ஜன. 8: கும்பகோணத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. இதுகுறித்து கும்பகோணம் கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சங்கரன் தலைமை வகிக்கிறார்.  இந்த கூட்டத்தில் கும்பகோணம் நகரம், கும்பகோணம் புறநகர். பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, திருக்கருக்காவூர், கணபதி அக்ரஹாரம் பிரிவு அலுவலகம் பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர் பங்கேற்று தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Power Consumers Meeting ,Kumbakonam ,
× RELATED தாம்பரத்தில் மின்நுகர்வோர் கூட்டம்