×

ஒரத்தநாடு பகுதியில் புகையான் பூச்சிகள் தாக்கிய வயல்களில் அதிகாரிகள் ஆய்வு

ஒரத்தநாடு, ஜன. 8: ஒரத்தநாடு பகுதியில் புகையான் பூச்சி தாக்குதலுக்கான வயல்களில் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரி ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் தற்போது சம்பா கதிர்கள் நெல் பதராக மாறி விவசாயிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி ஜஸ்டின் ஆய்வு செய்வதற்காக குழுவினருடன் வந்திருந்தார். இந்த ஆய்வின்போது விவசாயிகளை அழைத்து கிராம முக்கியமான பகுதிகளில் கூட்டங்களை நடத்தி விவசாயிகளுக்கு புகையானை கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக தேவையான வழிமுறை, ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தார். இந்த கிராமப்புற கூட்டங்களில் ஒரத்தநாடு வேளாண்மை துறை அதிகாரிகளும் அலுவலர்களும் பங்கேற்றனர்.மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி ஜஸ்டின், வேளாண்துறை குழுவினருடன் இணைந்து விவசாயிகளோடு ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கிராமம் தோறும் விவசாயிகள் இந்த ஆலோசனையை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.சம்பா நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து பகுதி விளைநிலங்களிலும் உடனடியாக தண்ணீரை வடிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று போர்க்கால அடிப்படையில் இந்த அதிகாரிகள் குழுவோடு மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி வந்தது ஒரத்தநாடு பகுதியை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...