×

சாரங்கபாணி கோயிலில் பிரம்மோத்வச விழா கொடியேற்றம்

கும்பகோணம், ஜன. 8: கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் சங்க்ரமண பிரம்மோத்சவ விழா கருட கொடியேற்றத்துடன் துவங்கியது.108 வைணவ தலங்களில் 7 ஆழ்வார்களால் நாலாயிர திவ்யபிரபந்தம் அருள பெற்று, திருப்பதி, ரங்கத்துக்கு அடுத்த 3வது தலமாக சாரங்கபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சங்க்ரமண பிரம்மோத்சவ விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகளும், சேனை முதல்வர் புறப்பாடும் நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு கருடக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது உற்சவர் ஆராவமுதன் பெருமாள் உபய நாச்சியார்களுடன் ராஜ அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். காலை 11 மணியளவில் தேசிக பிரபந்த ஆழ்வார் சாற்றுமுறை ஆச்சார்யர்கள் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு இந்திர விமானம் வீதியுலா புறப்பாடு நடந்தது.தொடர்ந்து இன்று (8ம் தேதி) முதல் 14ம் தேதி வரை காலை, மாலை நேரங்களில் வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வரும் 15ம் தேதி தைப்பொங்கலன்று காலை 6.40 மணிக்கு வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Sarangapani Temple ,
× RELATED கும்பகோணம் சாரங்கபாணி கோயில்...