×

பேராவூரணி ஒன்றியத்தில் பதவியேற்பு விழா

பேராவூரணி, ஜன .8: பேராவூரணி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று காலை அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலக வளாகங்களில் நடந்தது.முதலாவதாக ஊராட்சி மன்ற தலைவரும், அதைதொடர்ந்து கிராம ஊராட்சி உறுப்பினர்களும் பதவியேற்று கொண்டனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.பதவியேற்று கொண்டு ஊராட்சி தலைவர்களின் விபரம்: அலிவலம்- ஆசைத்தம்பி, அம்மையாண்டி- முத்துராமலிங்கம், இடையாத்தி- அன்புக்கரசி, காலகம்- செந்தில்குமார், களத்தூர்- மாரிமுத்து, கல்லுரணிக்காடு- சுந்தரராஜன், குறிச்சி- வைரக்கண்ணு, மடத்திக்காடு- சுதாசினி, மாவடுகுறிச்சி- அமிர்தம், ஒட்டங்காடு- ராசாக்கண்ணு, பைங்கால்- அமுதா, பழையநகரம்- சுரேகா, பாலத்தளி- விஜயா, பெரியநாயகிபுரம்- வத்சலா, பின்னவாசல்- கண்மணி, பூவாளூர்- முருகேசன், புனல்வாசல்- சிவசம்பாள், செங்கமங்கலம்- செல்வம், செருவாவிடுதி வடக்கு- விஜயராமன், செருவாவிடுதி தெற்கு - ராமஜெயம், சொர்ணக்காடு- விஜயபாஸ்கரன், தென்னங்குடி- குணதா, திருச்சிற்றம்பலம்- மோகன், துறவிக்காடு- கற்புக்கரசி, வலப்பிரமன்காடு- கணேசன், வாட்டாத்திக்கோட்டை- பரமேஸ்வரி ஆகியோர் பதவியேற்றனர்.

Tags : Inauguration ,Peravurani Union ,
× RELATED தஞ்சையில் களோக்கோ கால்பந்து கழக...