ராஜகிரி- வன்னியடி சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

பாபநாசம், ஜன. 8: ராஜகிரி- வன்னியடி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசம் அடுத்த ராஜகிரியில் இருந்து வன்னியடிக்கு செல்லும் சாலை அமைத்து பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வன்னியடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்கிற மாணவர்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று வன்னியடி, இளங்கார்குடிக்கு செல்கிற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். குண்டும், குழியுமாக மாறிய சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road ,Rajagiri-Wanniyadi ,
× RELATED சாலை விதி விழிப்புணர்வை கண்டறிய...